தொப்புளில் வைத்து பட்டாசு வெடித்த பெண்ணின் வயிற்றில் பலத்த தீக்காயம்... அதிர்ச்சி வீடியோ!
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும்போது ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த பெண் ஒருவர் தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Woman suffers abdominal burns after risky Diwali celebration She placed a lit firecracker near her navel, apparently not expecting red-hot sparks to shoot straight into her stomach Over 10,000 burn cases are recorded in India every year after Diwali, per doctors' estimates https://t.co/CtZN0p7ubT
— RT (@RT_com) November 11, 2026
பட்டாசு வெடிப்பதில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்ட அந்தப் பெண், தீப்பற்ற வைத்த பட்டாசைத் தனது தொப்புள் பகுதியில் வைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பட்டாசிலிருந்து சீறிப் பாய்ந்த தீப்பொறிகள் அவரது வயிற்றுப் பகுதியில் பட்டுள்ளன. இதனால் வயிற்றில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சிக்காகக் கொண்டாடப்படும் நிகழ்வாக இருந்தாலும், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபடுவது ஆபத்தானது. குறிப்பாக, உடலுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பது கடுமையான தீக்காயங்களையும் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
பட்டாசுகளைத் திறந்தவெளியில், பாதுகாப்பான தூரத்தில் வைத்து மட்டுமே வெடிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
