7 மாத கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்.. அதிக ரத்தபோக்கினால் பலியான சோகம்..!!

 
அரியலூரில் கர்ப்பிணி உயிரிழப்பு  அரியலூரில் கர்ப்பிணி உயிரிழப்பு

7 மாத கருவை கலைக்க முயன்ற பெண் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையை அணுகாமல் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி உண்டதால் விபரீதம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி கிராமம், கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி இவர்,கடந்த 2017 ஆம் ஆண்டு செந்துறை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா(23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் தாரணி என்ற மகளும், 2 வயதில் ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரமணா கர்ப்பத்தை கலைக்க தனியார் மருந்துக் கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில்
அனுமதிக்கப்பட்டார்.

Udayarpalayam, Ariyalur : உடையார்பாளையம்: ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில்  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அடையாளம் தெரியாத மூதாட்டி ...

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது, அவரது வயிற்றில் இறந்த நிலையில் இருந்த பெண் சிசுவை அகற்றினர். இதனைத்தொடர்ந்து அதிக ரத்துப் போக்கு ஏற்பட்டதால் ரமணா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரமணா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினரும், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.