சேலத்தில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது!
Aug 31, 2026, 22:26 IST
சேலத்தில் பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டித் தண்ணீர் தொட்டிகளில் வீசிய வழக்கில், உயிரிழந்தவர் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் தாதனூர் பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான தங்கமணி என்பது காவல்துறை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கொடூரச் கொலைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தொடர்புடைய 3 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதுடன், இக்கொலையின் பின்னணி மற்றும் இதர காரணங்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
