ஜப்பானில் 7-வது குழந்தையைப் பெற்றெடுத்த பெண் எழுத்தாளர்: பெண்களுக்கு சிறப்பு வேண்டுகோள்

 
ஜப்பான் எழுத்தாளர் குழந்தை

ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோய் ஹாஷிமோட்டோ (37), தனக்கு ஏழாவது குழந்தை பிறந்ததாகச் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஜப்பானில் பிறப்பு விகிதம் கடுமையாகச் சரிந்துவரும் நிலையில், குழந்தைகளைப் பெற்றெடுக்க இதுவே சரியான தருணம் என்று மற்ற பெண்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் மக்கள்தொகைச் சரிவை எதிர்கொள்ளும் வகையில் இவர் விடுத்துள்ள இந்தச் செய்தி தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த இவரது கருத்துகளுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதோடு, இவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் நிலவும் மக்கள் தொகை குறைப்புப் பிரச்சினைக்கு மத்தியில் இவரது செயல் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.