அதிர்ச்சி... சூட்கேஸில் இளம்பெண் சடலம்... மலைப்பாதையில் வீசி விட்டு சென்ற கொடுமை!

 
ஏற்காடு

வட இந்தியாவில் துவங்கிய சூட்கேஸ் கலாச்சாரம் இப்போது தமிழகத்தையும் ஆட்டிப் படைக்கிறது. வட இந்தியாவில், மனைவி, காதலியைக் கொலை செய்து விட்டு உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக்கி சூட்கேஸில் மறைத்து வீசி செல்லும் போது சமீபமாக அதிகரித்து வந்த நிலையில், பெங்களூருவில் ட்ரம்மில் அடைத்து வைத்து வீசுவது பரவியது. தற்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக சேலம் மாவட்டத்தில், ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண் சடலம் ஒன்று சூட்கேஸில் அடைத்து வைத்து வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காடு மலைப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 40 அடி பாலம் அருகே கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து சந்தேகமடைந்த வனத்துறையினர் மலைப்பாதையை ஒட்டிய பள்ளத்தில் இறங்கிப் பார்த்தபோது சுமார் 10 அடி ஆழத்தில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்துக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்த போது, சூட்கேஸ் உள்ளே அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கிடந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடைகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் உடலை சூட்கேசில் போட்டு வீசியது யார்? இறந்த பெண் யார்? எந்த ஊரிலிருந்து? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web