ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கும் மகளிர் உதவித்தொகை!!

 
மகளிர் உரிமை தொகை

திமுக தேர்தல் அறிக்கையில்   மகளிருக்கு மாதம் ரூ1,000  உரிமைத்தொகை  வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தத்.  கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்த நிலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில்  மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.   தற்போது  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  

உரிமை தொகை

முதற்கட்டமாக 20,765 ரேஷன்‌ கடைகளில்‌ இருக்கும்‌ குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல்‌ 04.08.2023 வரை விண்ணப்பப்‌ பதிவு முகாம்கள்‌ நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு இதுவரை 1.54 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதியோர் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறுவது தடைபடக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தினார்.

மகளிர் உரிமை தொகை


இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். இதே போன்று, வருவாய்த்துறையால் மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்களும் தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஆகஸ்ட்18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவித்துள்ள முதல்வர், இந்த முகாம்களில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பம் பதிவு செய்ய தவறியவர்களும் பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web