தாய்மையின் உச்சம் ... பிஸி ஷெட்யூலிலும் தனி இருக்கை, மகளுக்கு உணவூட்டும் பெண் ஆட்டோ ஓட்டுனர்... வைரல் வீடியோ!
சமூக வலைத்தளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் தாய்மையின் நெகிழ்ச்சி உணரப்படுகிறது. அதன்படி அந்த வீடியோவில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது குழந்தைக்கு அன்புடன் உணவூட்டும் நெகிழ்ச்சியான காணொளி வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டி வரும் அந்தப் பெண் தனது சிறிய மகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டே பணியை தொடர்கிறார்.
During a busy day, an auto driver (a mother) stops her auto to feed her little daughter.
— Tathvam-asi (@tathvamasi6) March 5, 2026
Love the way she secured her little one😍
Mother’s love can overcome all hurdles. pic.twitter.com/oBrgUXwsLo
ஆட்டோவில் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மகளை அருகே தனி இருக்கையில் அமர வைத்திருக்கும் அவர் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்து மகளுக்கு அன்புடன் உணவூட்டுவதை காணமுடிகிறது. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு தாயின் கடின உழைப்பிற்கும், தியாகத்திற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. வசதி குறைவாக இருந்தாலும் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டு வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் அந்தத் தாயின் உறுதியும் தாய்மையும் பலரையும் நெகிழச்செய்துள்ளது.
