மண்டியிட்டு, மண்சோறு சாப்பிட்டு குழந்தை வரம் கேட்ட பெண்கள்!!

 
மண்சோறு

குழந்தை வரம்  வேண்டும் பல வகையான நேர்த்திக்கடன்கள், வேண்டுதல்கள் , பரிகாரங்கள் செய்வது வாடிக்கை தான். ஆனால் குழந்தை வரத்திற்காக மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு,   கோட்டுப்பாக்கம் கிராமத்தில்,    பரதேசி ஆறுமுக சுவாமிகள் என்பவரின் ஜீவசமாதி உள்ளது. அந்த ஜீவ சமாதியில் கோவில் கட்டி, கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.   ஆடி அமாவாசை தினத்தில் ஜீவ சமாதி அடைந்த  சித்தருக்கு குருபூஜை செய்யப்படுவது வழக்கம்.

மண்சோறு
 ஆடி அமாவாசை தினமான நேற்று, 187ம் ஆண்டு குரு பூஜை விழா  சிறப்பு பூஜைகளுடன் நடத்தப்பட்டது.  ஜீவ சமாதியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.  சுவாமிக்கு படையலிட்ட பிரசாதம், குழந்தை இல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டது. அந்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள் குளக்கரையில் வைத்து மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர்.

குழந்தை

இதனை செய்தால்  குழந்தை வரம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெண்கள் மடியை ஏந்தி வாங்க வேண்டும். இந்த பிரசாதத்தை   கோவில் குளத்தங்கரையில் வைத்து, மண்டியிட்டு சாப்பிட வேண்டும்.  குழந்தை இல்லாமல், இங்கு பிரார்த்தனை செய்து குழந்தை பெற்ற தம்பதிகளும் இங்கு வந்து  நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web