கணவனுடன் தகராறு... பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை!

 
pen police pen police

சென்னை எழும்பூர் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் விஜய். 30 வயதான இவர் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜீனியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 28 வயதான சத்யா எழும்பூர் போலீஸ் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்து, தற்போது ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஆம்புலன்ஸ்

இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், குழந்தையைப் பராமரிப்பதில் இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சத்யா, வீட்டின் ஒரு அறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த விஜய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சத்யாவை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சத்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்ததால், இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.