மகளிர் பிரிமியர் லீக்... கோப்பையை வென்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்!

 
மகளிர் பிரீமியர் லீக்


நேற்று இரவு நடைபெற்ற மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை  வீழ்த்தி  கோப்பையை வென்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. 

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டெல்லி கேப்பிடல் அணி இறுதிப் போட்டியில்  விளையாடியது. 

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் மெக் லென்னிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அதிரடி வீராங்கனை செபாலி வர்மா  அதிரடியாக விளையாடி மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரி என 27 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.

மகளிர் பிரிமியர் லீக்

இதேபோன்று கேப்டன் மெக் லென்னிங் 23 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது. டெல்லி அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா மற்றும் அலைஸ் கேப்சி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேற மரியான்ஸி மற்றும் ஜெஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ராதா யாதவ் 12 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அடுத்ததாக மின்னு மணி 5 ரன்களில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவரில் வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய ஆர் சி பி வீராங்கனை ஸ்ரேயங்கா பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும்,  சோபி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆர் சி பி அணி களம் இறங்கியது. கேப்டன் ஸ்ருதி மந்தானா மற்றும் சோபி டிவைன் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சோபி டிவைன் 27 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். 

மகளிர் பிரீமியர் லீக்
ஸ்மிருதி மந்தானா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இருந்தார். பெங்களூரு அணி 82 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. இதனையடுத்து எலைஸ் பெர்ரி மற்றும் ரிச்சி கோஸ் ஜோடி கடைசிவரை நின்று அணியின் வெற்றியை பெற உதவியது.

இதன் மூலம் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை ஆர்சிபி அணி வென்றிருக்கிறது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆர்சிபி அணி வெல்லும் முதல் கோப்பை இதுவாகும்.  இதனால் பெங்களூர் ரசிகர்கள் மகளிர் அணியினரை கொண்டாடி வருகிறார்கள்.

From around the web