மகளிர் உரிமைத் தொகை முதல் தோழி விடுதிகள் வரை.... பெண்களுக்கு என்னென்ன திட்டங்கள்... ஒரு அலசல்!

 
பட்ஜெட்
 
 இன்று தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.  ததும்பி வழியும் தமிழ் பெருமிதம் என்ற முழக்கத்துடனும் அதோடு  உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம் என்ற முழக்கத்துடனும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.   இந்த பட்ஜெட்டில் மகளிர் முன்னேற்றத்திற்காண சிறப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்து இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.   
 பேருந்து
விடியல் பயணம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்  இத்திட்டத்தின் மூலம், மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. இதற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு   
தமிழகம் முழுவதும் புதிய 10,000  மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். அதன்படி, ரூ.37,000 கோடி கடனும் வழங்க இலக்கு  
 தோழி விடுதி
சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்  
ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்  
மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000  
ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை  
 
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறாதவர்களும்  புதிதாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும்.  
From around the web