தீபாவளிக்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000... பெண்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு!

 
மகளிர் சுய உதவிக்குழு உதவித்தொகை தமிழக அரசு விஜய்

நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்காலச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000-ஐ முன்கூட்டியே வழங்கிட அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 15-ஆம் தேதி ரூ.1,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத்தொகை உதவித்தொகை

இந்நிலையில், வரும் நவம்பர் 8-ஆம் தேதியே தீபாவளி பண்டிகை வருவதால், ஆடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பண்டிகை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 15-ஆம் தேதி வழங்கப்படும் தொகையை பண்டிகைக்கு முன்பாகவே விடுவிக்க வேண்டும் என்று பயனாளி பெண்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பெண்களின் கோரிக்கையையும் பண்டிகைக் காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, வழக்கமாக 15-ஆம் தேதி வழங்கப்படும் தொகையை முன்கூட்டியே – அதாவது நாளை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விடுவிப்பது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை

அரசு தரப்பில் இருந்து இந்த நிதி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டால், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட மிகவும் உதவியாக இருக்கும் என ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துச் சேர்ந்த பெண்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.