மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு.. பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் மோதல்!

 
மகளிர் சாம்பியன்ஸ் டிராபி

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 5-வது சீசனுக்கான அதிகாரப்பூர்வ ஆட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தத் தொடர், வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஜனவரி 14-ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகளிர் கிரிக்கெட் மகளிர்கிரிக்கெட்

இந்த சீசனின் 22 போட்டிகளும் வதோதரா மற்றும் மும்பை ஆகிய இரு முக்கிய நகரங்களில் தலா 11 போட்டிகள் எனப் பகிர்ந்தளிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன.

ஜனவரி 14 முதல் ஜனவரி 24 வரை வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் முதல் 11 லீக் போட்டிகள் நடைபெறும்.  ஜனவரி 26 முதல் தொடரின் எஞ்சிய 11 போட்டிகள் மும்பையில் உள்ள புகழ்பெற்ற பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும். 

மகளிர் கிரிக்கெ பிரீமியர் லீக்

தொடரின் அனைத்து லீக் சுற்று ஆட்டங்களும் பிப்ரவரி 3-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.  லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

புள்ளிப்பட்டியலில் 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையேயான ‘எலிமினேட்டர்’ போட்டி பிப்ரவரி 5-ம் தேதி மும்பையில் நடைபெறும். 

சாம்பியன் பட்டத்தைத் தீர்மானிக்கும் பிரம்மாண்ட இறுதிப்போட்டி பிப்ரவரி 7-ஆம் தேதி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.