நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு: இன்று முக்கிய வாக்கெடுப்பு!

 
நாடாளுமன்றம் பாராளுமன்றம் நாடாளுமன்றம் பாராளுமன்றம்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான 3 முக்கிய மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த மசோதாக்கள் மூலம் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம், வரும் 2029 பொதுத்தேர்தலில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வழிவகை செய்யப்படும்.

நாடாளுமன்றம் மக்களவை

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ள இந்த 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிசெய்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ளவும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அரசியல் வரைபடம் பெரிய அளவில் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம்

இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சில கூட்டணி கட்சிகள் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்பது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.