மகளிர் டி20 உலகக் கோப்பை... பரிசுத்தொகை ரூ.82 கோடி அறிவிப்பு!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (ஏப்ரல் 13, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்தப் பரிசுத்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தப் பரிசுத் தொகையாக சுமார் ரூ.82 கோடி ($8,764,615) அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு தொடரை விட 10% அதிகமாகும். கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.21.8 கோடி ($2.34 மில்லியன்) பரிசாக வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு சுமார் ரூ.10 கோடி ($1.17 மில்லியன்) வழங்கப்படும்.

அரை இறுதி வரை சென்ற அணிகள் அரை இறுதியில் வெளியேறும் அணிகளுக்குத் தலா ரூ.6.29 கோடி வழங்கப்படும். குழு நிலையில் வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் ரூ.29 லட்சம் கூடுதல் பரிசாக அளிக்கப்படும். மேலும், பங்கேற்கும் 12 அணிகளுக்கும் தலா குறைந்தபட்சம் ரூ.2.06 கோடி உறுதி செய்யப்பட்டுள்ளது.
