அதிசயம்... 70 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வால் நட்சத்திரம்... வெறும் கண்களால் பாக்கலாம்!

 
வால் நட்சத்திரம்

 வானில் அதிசயங்கள் பலப்பல . இது ஆராய்ச்சிகள் பல நூறு வருடங்களாக இன்னும் தொடர்கின்றன. அந்த வகையில் வானில் வால்நட்சத்திரம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வானில் தோன்றக்கூடியது. வால் நட்சத்திரம் என்பது  சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் எனப்படுகிறது. ஒவ்வொரு  வால் நட்சத்திரமும்  சூரியகுடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகிகிறது.  வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி   ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகி விடுகிறது.

வால் நட்சத்திரம்


இந்த வகையான வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதானவை. அத்துடன்  வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரக்கூடிய '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.சுமார் 30 கி.மீ. நீளமுள்ள இந்த வால்நட்சத்திரம்  தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு அடிவானத்தில் ஏற்படும் இந்த வால்நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

வால் நட்சத்திரம்


இதற்கு முன்பு இந்த '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' வால்நட்சத்திரமானது 1385ம் ஆண்டு சீனாவிலும், 1457-ம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும்  என்கின்றனர்  விஞ்ஞானிகள். இதன் பிறகு இதே போன்ற ஒரு வால் நட்சத்திரம் 2095ல் தான் தோன்றும் எனத் தெரிகிறது. 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web