செம!! அட்டகாச அறிமுகம்!! ஆப்பிள் ஐபோன் சிரீஸ் 14 விற்பனைக்கு !!

 
ஐபோன்

இன்று அனைவரின் கைகளிலும் ஆறாம் விரலாக மொபைல் போன் தவழ்கிறது. இதில் தான் வாழ்க்கையே என்ற வகையில் உணவு முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் கையில் இருக்கும் போனிலேயே முடிந்து வருகிறது. ஆண்ட்ராய்டு போன்கள் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற அளவுக்கு ஒருவரே 4 அல்லது 5 போன்களை வைத்துள்ளனர். அதிலும் இளசுகள் மார்க்கெட்டில் புது மாடல்கள் வர வர அதனை மாற்றிக் கொண்டே உள்ளனர். 

ஐபோன்
பலரின் கனவாக அமைந்திருப்பது ஐபோன்களே. மொபைல்  பிரியர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான ஐபோன் 14 சீரிஸ் மொபைல் போன்கள் தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் தலைமையகம் அமைந்திருக்கும் அமெரிக்காவின் பூப்ரன்டீனோ நகரில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  இது குறித்த அறிவிப்புக்களையும், விலைக்க்குறிப்புக்களையும் வெளியிட்டு உரை நிகழ்த்தியுள்ளார்.

ஐபோன்

அதன்படி  ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 புரோ மற்றும் ஐபோன் 14 புரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஐபோன் 14ன் ஆரம்ப விலை ரூ.79,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஐபோன் 14 பிளஸ் தொடக்க விலை 89,900 ரூபாய் எனவும், ஐபோன் 14 புரோ தொடக்க விலை 1,29,900 ரூபாய் எனவும், ஐபோன் 14 புரோ மேக்ஸ் ஆரம்ப விலை 1,39,900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள்  செப்டம்பர் 16ம் தேதி முதல் விற்பனைக்காக வரவிருக்கின்றன. அதேபோல ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ஸ் சீரிஸ் 8 ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்பவிலை ரூ45,900 என தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் ஏர் பட்ஸ் ப்ரோ 2 வின் ஆரம்ப விலை ரூ26,900  என தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web