செம!! இனி இன்ஸ்டா மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!!

 
இன்ஸ்டாகிராம்

ஸ்மார்ட் போனின் வரவிற்குப் பிறகு மனிதனின் வாழ்வியலில் ஒரு பெரிய மாற்றம் வந்தது உண்மை . ஒரு பொருள் பல வேளை என்பதுபோல் ஒரு போன் அலாரமாக, ரேடியோவாக, டீவியாக, கணினியாக, விளையாட்டு களமாக, இப்படி அதன் பயன்களை அடுக்கி கொன்டே போகலாம்.

இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பெரிய ஸ்டாராக வர வேண்டும் என்றால் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களும் நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டாலே போதும் அதிக பாலோயர்களை பெற்று ஸ்டார் ஆகலாம். அதன் மூலம் வருமானமும் பெறலாம்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒருவர் பதிவிடும் ரீல்ஸ் தங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில், இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவருக்கு ‘ஸ்டார்ஸ்’ (Stars) அனுப்பலாம். இந்த ஸ்டார்களை ரீல்ஸ் பதிவிட்ட அந்த நபர் பணமாக மாற்றிக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 1,000 பாலோவர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மட்டுமே இந்த ‘ஸ்டார்’ அம்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடும் உளைச்சலில் பொதுமக்கள்!! 3 நாட்களுக்கு மொபைல் சேவைகள் ரத்து!!

இந்த அப்டேட் மூலம் பணம் பெறுவதற்கு அந்த பயனர் இன்ஸ்டாகிராமிற்கு மெயில் அனுப்ப வேண்டும். பிறகு இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவர்களை தொடர்பு கொள்ளும். இதனை பயன்படுத்தி மொபைலில் இணைத்து இருக்கும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் பணமாக மாற்றிகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web