செம!! 300கி வெயிட்டை தூக்கி ரியல் ஹீரோவாக மாறிய இளைஞர்!!

 
ரியல் பாகுபலி

கடந்த சில வருடங்களுக்கு முன் பாகுபலி திரைப்படம் பெரும் வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சிவலிங்கத்தை தூக்கி கொண்டு நடக்கும் காட்சி ரசிகர்களிடையே  வைரலானது. இதற்காக  அட்டைகளை வைத்து சிவலிங்கம் தயாரிக்கப்பட்டது. இதே போல் ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இடுக்கி அருகே தோப்புறான்குடி பகுதியில் ஓண தின ஸ்பெஷலாக மரத்தடியை தூக்கி நடந்து செல்லும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில், பிரதீஷ் என்ற வாலிபர், சுமார் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை தோளில் தூக்கி உள்ளார். தூக்கியது மட்டுமின்றி, சுமார் 73 மீட்டர் தூரம் வரை நடந்து செல்லவும் செய்துள்ளார்.

பாகுபலி

இவை, ஒரு போட்டி போல இது நடத்தப்பட்ட நிலையில், சாலையை சூழ்ந்திருந்த பொது மக்கள் அனைவரும், வாலிபருடன் சேர்ந்து ஆர்ப்பரித்து அவருக்கு உற்சாகத்துடன் ஊக்கமளிக்கவும் செய்தனர்.சாலை முழுக்க நிரம்பி இருந்த மக்கள் வெள்ளத்தில், ஆரவாரத்திற்கு மத்தியில் உடல் பலத்துடன் மன வலிமையையும் ஒரு சேர, 300 கிலோ எடையுள்ள மரக் கட்டையை தூக்கி கொண்டு 73 மீட்டர் நடக்கவும் செய்துள்ளார் பிரதீஷ். அதன் பின்னர், அவர் மரக்கட்டையை சாலையில் போட்டதும் ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் வேற லெவலில் கரகோஷித்து பாராட்டவும் செய்தனர்.

பாகுபலி

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பாகுபலி முதல் பாகத்தில் பிரபாஸ் கல்லால் ஆன சிவ லிங்கத்தை தோளில் தூக்கிச் செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.அவர் தூக்கிய கல்லாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கேரள இளைஞர் நிஜமாகவே 300 கிலோ மரத்தை தூக்கிச் சென்றதால் அவரை நிஜ பாகுபலி என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web