சம்பளப் பாக்கி ரூ.30,000 தராத முதலாளியின் காரைத் திருடிச் சென்ற தொழிலாளி - 6 மாதங்களுக்குப் பிறகு கைது!
கேரளாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் வேலை பார்த்த தொழிலாளி, தனக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கி தராத ஆத்திரத்தில் அவரது காரைத் திருடிச் சென்ற வழக்கில் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அனுப் (39) என்பவர், ஒப்பந்ததாரரான நந்து என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். அனுப் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் அவருக்கு வழங்க வேண்டிய ரூ.30,000 சம்பளப் பணம் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

பணம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அனுப், ஒப்பந்ததாரர் நந்துவின் காரைத் திருடிச் சென்று தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்து வந்த அனுப்பை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அவரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
