உலக சாம்பியன் குகேஷின் மாஸ் ஆட்டம்... சூப்பர் ரேபிட் செஸ்ஸில் 4-வது இடம்!
கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான ‘சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ்’ செஸ் போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தனது கடைசி சுற்றில் அதிரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
ரேபிட் பிரிவின் 9-வது மற்றும் இறுதிச் சுற்றில், உலக செஸ் சாம்பியனான குகேஷ், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான அமெரிக்காவின் பாபியானோ கருனாவை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், ஆரம்பம் முதலே மிகுந்த நிதானத்துடனும், துல்லியமான வியூகத்துடனும் விளையாடினார். ஆட்டத்தின் 49-வது நகர்த்தலில், கருனாவின் தடுப்பாட்டங்களை முறியடித்து குகேஷ் வெற்றியைத் தன்வசமாக்கினார். உலகின் டாப் ரேங்க் வீரர்களில் ஒருவரான கருனாவை குகேஷ் வீழ்த்தியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேபிட் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய வீரர் குகேஷ் 9 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரேபிட் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்து பிளிட்ஸ் சுற்றுகள் தொடங்க உள்ளன. இதில் குகேஷ் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பங்கேற்கும் முக்கியத் தொடர் இது என்பதால், சர்வதேச செஸ் உலகம் குகேஷின் ஒவ்வொரு நகர்வையும் உற்று நோக்கி வருகிறது.
