6ஜி தொலைத்தொடர்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த உலக நாடுகள் ஒப்பந்தம்!
எதிர்கால டிஜிட்டல் உலகின் பிரதான தேவையாகக் கருதப்படும் 6ஜி தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்தவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்கா உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்த முக்கிய சர்வதேசக் கூட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.

வரவிருக்கும் 12 மாதங்களுக்குள் 6ஜி தொழில்நுட்ப உருவாக்கத்தில் புலப்படக்கூடிய தெளிவான முன்னேற்றத்தை எட்டும் வகையில், கூட்டு ஆராய்ச்சி மற்றும் சர்வதேசத் தொடர்புகளை வலுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
6ஜி நெட்வொர்க் பயன்பாட்டிற்கு வரும் போது அதன் தரக் கட்டுப்பாடு, தரவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னுரிமைகளை உலகளவில் ஒரே சீராக அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
5ஜி தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட திறந்தநிலை கட்டமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பிற்கு இதில் உச்சகட்ட முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
