130 மீட்டர் நீளம்... உலகின் மிகப்பெரிய மின்சாரக் கப்பல் சேவை தொடக்கம்!

 
கப்பல்

 

உலகின் மிகப்பெரிய பேட்டரி மின்சாரப் பயணிகள் கப்பலான ‘சீனா சோரில்லா’ (China Zorrilla), அர்ஜென்டினா–உருகுவே நாடுகளுக்கு இடையே தனது வணிகச் சேவையைத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் இன்காட் தாஸ்மேனியா நிறுவனம் தயாரித்த இந்தக் கப்பல், பியூனஸ் அயர்ஸ் மற்றும் கொலோனியா டெல் சாக்ரமெண்டோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.

130 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் 2,100 பயணிகள் மற்றும் 225 வாகனங்களை ஏற்றிச் செல்ல முடியும். 40 மெகாவாட் மணி நேரத்துக்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரி அமைப்பு, எட்டு மின்சார வாட்டர்ஜெட் உந்துவிசைகளை இயக்குகிறது.

டீசல் எரிபொருள் பயன்படுத்தாமல் இயங்குவதால், புகை வெளியேற்றம், இயந்திரச் சத்தம் மற்றும் அதிர்வு குறைகின்றன. இந்தத் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல் போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.