127 வயதில் உலகின் மிக வயதானவர் காலமானார்!!

 
ஜோஸ் ஆலினா

பிரேசிலில் வசித்து வரும்   ஜோஸ் பாலினோ  ஆகஸ்ட் 4ம் தேதி வெள்ளிக்கிழமை தனது 128வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது. இந்நிலையில், மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில்  பெட்ரா பொனிடாவில்  வீட்டில் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால்  இறந்துள்ளார்.  இதனை பாலினோவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  அவர்  கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவின் கொரேகோ டோஸ் ஃபில்ஹோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஜோஸ் பாலினா


ஆகஸ்ட் 4, 1895 ல் பிறந்த ஜோஸ் பாலினா, முதல் மற்றும் 2ம் உலகப் போர் மற்றும்  கொரோனா பெருந்தொற்று நோய் காலகட்டத்தில் வாழ்ந்தவர். வில்லியன் ஜோஸ் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்ற அதிகாரி, ஜோஸ் பாலினாவின் வயது துல்லியமானது எனவும்,  அவர் 1900 க்கு முன் பிறந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.  ஜோஸ் பாலினோவின் பிறப்பு  குறித்த தகவல்கள்   துல்லியமாக இல்லை. இவரின் ஆவணங்களை உலக சாதனைகளுக்கான கின்னஸ் அமைப்பு ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

rip

ஸ்பெயினில் வசித்து வரும்   116 வயதான மரியா பிரன்யாஸ் மோரேரா உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.ஜோஸ் பாலினா   எளிய மற்றும் அடக்கமான மனிதர்  தொழில்மயமான எதையும் விரும்புவதில்லை என தெரிவித்துள்ளனர்.  அவர் கிராமப்புறங்களில் உள்ள பொருட்களையே அதிகம் விரும்பினார் .  தனது சொந்த பண்ணையில் கோழிகள் மற்றும் பன்றிகளை வளர்த்து வந்தார்.  ஜோஸ் பாலினா தனது 7 பிள்ளைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 எள்ளுப் பேரக்குழந்தைகள்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web