அட... பிரதமர் மோடிக்கு உலகின் மிக உயரமான சிலை!!

 
மோடிக்கு சிலை

பிரதமர் மோடிக்கு உலகிலேயே உயரமான சிலை ஒன்றை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில் 2023க்குள் இந்த பணிகளை முடிவடையச் செய்து சிலையை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புனே அருகே உள்ள லவாசா சுற்றுலா தளத்தில், பிரதமர் மோடிக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்க டார்வின் பிளாட்பார்ம் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் லிமிடெட்  நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  

மோடிக்கு சிலை


இதுவரை உலகில் உள்ள சிலைகளில் எல்லாம் மிக அதிக உயரம் கொண்டது குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை தான் . இந்த சிலை  182 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதைவிட  இன்னும் உயரமாக பிரதமர் மோடிக்கு 190லிருந்து 200 மீட்டர் வரையில் உயரம் கொண்டதாக சிலை அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மோடி

2023 இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு சிலையைத் திறக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு பணிகளை துவங்கியுள்ளது. இந்தியாவின்  ஒருமைப்பாட்டிற்காக பிரதமர் மோடியின்  பங்களிப்பை கௌரவிக்கும் வகையில்    உலகின் மிக உயரமான சிலை அமைக்கவுள்ளோம் என டி பி ஐ எல் நிறுவனத் தலைவர் அஜய் ஹரிநாத் சிங் தெரிவித்துள்ளார்.சர்தார் வல்லபாய் படேலின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு  2018ல்  படேலின் சிலை உருவாக்கப்பட்டது . சுமார் ரூ. 2900 கோடி செலவில் 182 மீட்டர் உயரத்தில் உலகின் உயர்ந்த சிலையாக கட்டப்பட்டுள்ளது. குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த  சிலையை  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!