சர்வதேச டெடி டே வாழ்த்துக்கள்... காதலர் தின வாரத்தில டெடி டே கொண்டாட்டங்கள்!

 
டெடி

காதலர் தினம் என்னைக்குன்னு கேட்டா அடிக்க வருவீங்க.. 90ஸ் கிட்ஸ் மாதிரி எல்லாம் இப்போ கிடையாது. மூணாவது, நாளாவது  படிக்கிற பசங்களே காதலர் தினத்தை ஸ்டைலா சொல்லுதுங்க. காதலவர் தினம் வருகிற வாரத்தை, தினந்தோறும் ஒவ்வொரு பரிசு பொருட்களாக கொடுத்து கொண்டாடுகிறோம். காதலர் தின வாரத்தின் நான்காவது நாள் ‘டெடி டே’ வாக கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுவது காதலர் தினம் கிடையாது. ஆயுசுக்கும் கூட வாழப் போற பெண்ணை ஒரு நாள் மட்டும் கொண்டாடி தீர்க்க முடியுமா என்ன? அந்த வாரம் முழுக்கவே ஏழு விதமாக ஒவ்வொரு நாளும் கொண்டாடுறோம். வருஷம்  முழுக்க இப்படி கொண்டாடித் தீர்த்த அந்த ஜோடி அல்டிமேட். 

டெடி பியர்

டெடி தினத்தன்று காதலர்கள், டெடி பொம்மையைப் பரிசா தர்றாங்க. டெடி டேவுக்கு அப்புறமா ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே எல்லாம் வரிசையில இருக்கு. இந்த மென்மையான தினத்துல மென்மையான டெடி பியர்களை பரிசு வழங்கி சந்தோஷப்படுறாங்க. 

டெடி பியர்

மென்மையான பொம்மை...  டெடிபியரை மனசுக்குப் பிடிச்சவங்க தந்தா.. அது நீண்ட காலம் நம்முடன் இருக்கு. படுக்கையறை வரையில், உறங்கும் போதும் கூடவே இருக்கும். இப்போ பக்கத்துல செல்போன் வெச்சுக்கிட்டு தூங்குகிற மாதிரி.. அந்த காலத்துல டெடி பொம்மையைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு தூங்கினாங்க. 

From around the web