உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை... இந்திய அணி தொடர்ந்து முதலிடம்!

 
இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்

உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பாக்சிங் டே டெஸ்ட்: சிறப்பான தொடக்கத்தில் இந்தியா! கே.எல்.ராகுல் சதம்!

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா அபாராம்! 197 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

இதனால் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 61.11 சதவீத வெற்றிகளுடன் முதல் இடத்திலும், 59.26 சதவீத வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும், 57.69 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் உள்ளன.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!