ரூ.70,000 கோடி சொத்து மதிப்பு... உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு!
இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவர் ஆர்யமான் பிர்லா. 22 வயதான இவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகனும், கிரிக்கெட் வீரருமாவார். இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி இவர்களின் சொத்து மதிப்பு ரூ1000 கோடிக்கு மேல். வெளிநாடுகளில் டென்னிஸ், குத்துச் சண்டை போன்ற போட்டிகளில் ஜாம்பவான்களாக திகழும் பல வீரர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம்.
இவர்களை மிஞ்சும் வகையில் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக திகழ்பவர் ஆர்யமான் பிர்லா. பல்வேறு தொழில்களை நடத்தும் பிர்லா குழுமத்தின் உரிமையாளரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன்.
கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஆர்யமான், 9 முதல் தர போட்டிகளில் ஆடி, 414 ரன் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் இடம் பெற்றுள்ளன. 2017-18 ஆண்டுகளில் ரஞ்சி கோப்பைக்காக, மத்தியப்பிரதேச அணிக்காக ஆடியவர் . ஆர்யமானை 30 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. இருப்பினும், சொந்த காரணங்களுக்காக அந்த போட்டியில் விளையாடாமல் ஆர்யமான் விலகினார்.

இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆர்யமான் அறிவித்துள்ளார். இது குறித்து 'கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் முன், பிர்லா குடும்ப பேரன், குமார மங்கலம் பிர்லாவின் மகன் என்று மக்கள் என்னை அறிந்து வைத்திருந்தனர். ஆனால், கிரிக்கெட் ஆடத் தொடங்கிய பிறகு எனக்கென ஒரு பெயரை பெற்றுள்ளேன். இதுவே என் வாழ்நாள் சாதனை“ எனக் கூறியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
