உலகப்பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பிரதமர் மோடியுடன் பேச்சு!

 
எலான் மஸ்க், பிரதமர் மோடி

டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் செயல்திறன் நிர்வாகத்துறை தலைவராக செயல்பட்டு வருபவர்  எலான் மஸ்க். இவருடன் பிரதமர் மோடி உரையாடியிருப்பது உலகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.அந்த வகையில்  பிரதமர் மோடியுடன் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

எலான் மஸ்க், பிரதமர் மோடி

தொலைபேசி மூலம்  இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இந்த ஆலோசனையின் போது டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொழில் விவகாரம் உட்பட  பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது. எலான் மஸ்க்குடன் பேசியதை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி “ தொழில் நுட்பம் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

எலான் மஸ்க், பிரதமர் மோடி

இந்த விவகாரங்களில் அமெரிக்காவுடனான தனது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் செயல்திறன் நிர்வாகத்துறை தலைவராக உள்ள எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி உரையாடி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!