நாளை எடுத்த காரியம் வெற்றி பெற பங்குனி உத்திரத்தில் குலதெய்வ வழிபாடு...!!

 
அய்யனார்

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பவை ஆன்றோர் காலத்து ஆன்மீக  பழமொழிகள்.
நாளை மார்ச்23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரம் இந்துக்களால் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கின்றனர் ஆன்மீக அன்பர்கள்.

பங்குனி உத்திரம்
சாஸ்தா, அய்யனார் போன்ற காவல்தெய்வங்களை குலதெய்வங்களாக கொண்டவர்கள் பங்குனி உத்திரத்தில்  சென்று வழிபடுவதை  வழக்கமாக வைத்துள்ளனர்.  
 கார்த்திகை மாதம் திருகார்த்திகை மற்றும் பங்குனி  உத்திர நட்சத்திரத்திலும் வழிபாடு செய்வர்.  இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகமிக மேன்மையான உன்னதமான வாழ்வையும், அற்புதமான பலன்களையும் தரும்.   
குலதெய்வ கோவிலில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் கோடி நன்மை பெறலாம் என்கின்றது ஜோதிட சாஸ்திரம்.  பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வருவதை வழக்கமாக்கில் கொள்ள வேண்டும்.    பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கலிட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டு வர புண்ணிய பலன்களையும்,  முன்னோர்களது ஆசியையும் எளிதாகப் பெறலாம்  என்பது நம்பிக்கை.

 பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரத்தில் வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வசித்து வரும் வீட்டு  பூஜையறையில்  குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்யலாம்.
குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்கவும் பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு. பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து வழிபடலாம். இரட்டிப்பு பலன்களைப் பெற்று அமோகமான வளமான வாழ்வைப் பெறலாம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web