வாவ் சூப்பர் அறிவிப்பு.. இனி மாற்றுத்திறனாளிகள் எளிதாக ரயிலில் ஏறலாம்..!

 
மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏற வசதி
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் ரயிலில் எளிதாக ஏற சாய்வுதள வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாதவது:

Ramp facility for disabled, elderly people to board trains - trial use in  Chennai | மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ரெயிலில் ஏற சாய்வுதள வசதி  வருகிறது - சென்னையில் சோதனை ...

’ரயிலில் சாய்வுதளங்கள் தற்போது சென்னை ரெயில்வே நிலையத்தில் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. விரைவிலேயே வந்தே பாரத் ரெயில்களுக்கு இந்த சாய்வுதளங்கள் பயன்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து அனைத்து ரெயில்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

Vande Bharat Express - Wikipedia
ரெயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சக்கரநாற்காலிக்கும், சாய்வுதளத்துக்கும் முன்பதிவு செய்வதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்மூலம், குறிப்பிட்ட பயணிகள் ஏறவேண்டிய, இறங்கவேண்டிய ரெயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முன்கூட்டியே சாய்வுதளம் தயாராக வைக்கப்படும். இந்த சாய்வுதளத்தை ரெயில் பெட்டி வாயிலில் எளிதாக பொருத்தமுடியும். அதன் அகலம், மிகவும் தாழ்வான சரிவு காரணமாக பயணிகளால் சிரமமின்றி பயன்படுத்த முடியும். இந்த சாய்வுதளத்தை சோதனை முறையில் பயன்படுத்தியபோது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

From around the web