வாவ்.. இரட்டை குழந்தை பிறந்ததால் பயங்கர குஷியில் பிரபல நடிகை..!

பிரபல சின்னத்திரை ஸ்வேதா பண்டேகருக்கு இரட்டை குழந்தை பிறந்ததையடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
பிரபல நடிகைக்கு இரட்டை குழந்தை

சின்னத்திரையில் 'சந்திரலேகா' தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பந்தேகர். இவர் 2007ல் அஜித் நடிப்பில் வெளியான 'ஆழ்வார்' படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட  நிலையில், கர்ப்பமாக இருந்த ஸ்வேதா பண்டேகருக்கு,  இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக  அறிவித்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிடாம் பதிவில் ஸ்வேதா கூறியதாவது, "   மால், ஸ்வெப்னா என்ற இரண்டு முழு நிலவை கண்டோம். இரண்டும் வெவ்வேறானவை. இரண்டும் நன்றாக பிரகாசிக்கின்றன. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.

அஜித்துக்கு தங்கையாக நடித்த

இதுத்தொடர்பான குழந்தைகளின்  வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். சமூக வலைத்தளத்தில் குழந்தைகளின் வீடியோவை பகிர்ந்துள்ள இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.