பெற்றோர்களே உஷார்... பிரபல கம்பெனி பிஸ்கட் பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள்!
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பெட்டிக்கடையில் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய நபாட்டி வேஃபர் பிஸ்கட்டை தனது குழந்தைக்காக வாங்கி சென்று கொடுத்துள்ளார்.

அந்த தின்பண்டத்தை உண்பதற்காக அவரது குழந்தைகள் தின்பண்டத்தின் மேலே உள்ள கவரை பிரித்து உண்ண முயன்ற குழந்தைகள் அதில் புழுக்கள் உயிருடன் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து பெற்றோரிடம் காண்பித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளிடமிருந்து நபாட்டி தின்பண்டத்தை வாங்கி பரிசோதனை செய்தபோது அதில் புழுக்கள் முண்டி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த தின்பண்டத்தின் காலாவதி காலம் மேலும் ஆறு மாதங்கள் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த தின்பண்டத்தில் உயிருடன் புழுக்கள் இருப்பதால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற தின்பன்டங்களை முறையாக ஆய்வு செய்து பின்பு கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
