WWE நட்சத்திரம் பிரான்சன் ரீட் காலமானார்... WWE அதிகாரப்பூர்வ அறிவிப்பு - போட்டியின் போது மேடையிலிருந்து விழுந்த துயரம்!

 
WWE பிரான்சன் ரீட்

WWE ரசிகர்களால் பிரான்சன் ரீட் என அறியப்படும் ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஜெர்மைன் ஹேலி (38) காலமானதாக WWE நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மருத்துவச் சிக்கல்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற WWE கிரவுன் ஜூவல் போட்டியின் போது, மோதல் ஒன்றில் மேடையிலிருந்து கீழே விழுந்ததில் பிரான்சன் ரீட்டுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

விலா எலும்பு முறிவு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட காயங்களுக்காகச் சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். இருப்பினும், இந்தக் காயங்களுக்கும் அவரது மரணத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஜெர்மைன் ஹேலியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள WWE நிறுவனம், அவர் மல்யுத்த அரங்கில் தனித்துவமான வீரராகவும், குடும்பத்தினர் மற்றும் சக வீரர்களிடம் அன்பானவராகவும் திகழ்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளது.

மறைந்த பிரான்சன் ரீட்டுக்கு மனைவி பெயிஜ், மகள் மற்றும் பிறக்கவுள்ள குழந்தை ஆகியோர் உள்ளனர். அவரது திடீர் மறைவு மல்யுத்த உலகிலும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.