பிரபல மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல மல்யுத்த வீரரான பிரான்சன் ரீட் (38) உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மல்யுத்த ரசிகர்கள் மற்றும் விளையாட்டு உலகினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற கிரவுன் ஜுவல் போட்டியில் அவர் பங்கேற்றார்.
அந்தப் போட்டியின்போது மேடையிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் பிரான்சன் ரீட்டிற்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், விலா எலும்பு முறிவு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்ற பிறகு அமெரிக்கா திரும்பிய அவர், தொடர்ந்து மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மருத்துவச் சிக்கல்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியானாலும், போட்டியில் ஏற்பட்ட காயங்களுக்கும் மரணத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை
