கடலில் கார் ஓட்டியதாக ரூ.2,000 அபராதம்! 1 கி.மீ. வேகத்துக்கு போலீஸ் கொடுத்த அதிர்ச்சி

 
போலீஸ்

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. அதிகமாக காரை ஓட்டிய நபருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட ஆச்சரியமாக, அபராத ரசீதில் அவர் கார் ஓட்டிய இடம் அட்லாண்டிக் பெருங்கடல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Haryana man gets speeding challan, but his car seems to have taken a trip to the Atlantic Ocean! | - The Times of India

உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா - ஆக்ரா இடையிலான யமுனா விரைவுச்சாலையில் இலகுரக வாகனங்களுக்கு மணிக்கு 100 கி.மீ. வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுஜீத் சிவம் என்பவர் தனது மஹிந்திரா தார் காரை மணிக்கு 101 கி.மீ. வேகத்தில் ஓட்டியதாகக் கூறி போக்குவரத்து போலீசார் ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர்.

அபராத ரசீதில் சம்பவம் நடந்த இடத்தின் GPS விவரமாக 0°N, 0°E எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடா பகுதியாகும்.

Rs 2000 challan for 1kmph over speeding: Man fined on Yamuna Expressway, speed camera shows location in Atlantic Ocean - The Economic Times

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வைரலானது. இதற்கு பதிலளித்த நொய்டா போக்குவரத்து போலீசார், இ-சலான் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.GPS தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான இடம் பதிவாகியிருக்கலாம் எனக் கூறப்படும் இந்தச் சம்பவம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.