ஆகஸ்ட் 11 முதல் குறைந்த விலையில் ஏத்தர் இஸ்கூட்டர்!!

 
இ ஸ்கூட்டர்

பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்குப் பிறகு பலரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதற்கு வாகன சந்தையில் நல்ல மவுசு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜிங் செய்யும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஒருபக்கம் புதிய, புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மார்க்கெட்டில் முளைத்துவரும் நிலையில், மறுப்பக்கம் ஏற்கனவே சந்தையில் காலூன்றி விட்ட இவி நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் மார்க்கெட்டை விரிவுப்படுத்தும் முனைப்பில் உள்ளன.
இந்த வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450எஸ் என்ற பெயரில் புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. பொதுவாகவே, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலைமிக்கவை என்கிற பார்வை மக்களிடத்தில் உள்ளது. இதனை மாற்றும் விதமாக, குறைவான விலையில் ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம்   ஆகஸ்ட் 11ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 


 


இந்நிலையில், 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான புதிய டீசர் படத்தை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் இருந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால், புதிய 450எஸ் ஸ்கூட்டரின் பின் இறுதி முனையை மட்டுமே காண முடிகிறது. ஸ்கூட்டரின் பின்னால் இருந்து பார்த்தால், ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படுகின்ற இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பகுதியை காண முடியும்.
ஆனால், ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முற்றிலும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுவதால், அறிமுகத்திற்கு முன்பாக தெரியக்கூடாது என்பதற்காக அந்த பகுதி மட்டும் துணியினால் மூடப்பட்டு உள்ளது. ஏத்தர் 450எஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட உள்ளது புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என சொல்லுவதை விட, மலிவான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில் புதிய 450எஸ் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் சில அம்சங்களை பெற முடியாது.

இ ஸ்கூட்டர்
முக்கியமாக, புதிய 450எஸ் ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையை டச் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியாது. அதேபோல், நாவிகேஷன் எனப்படும் வழிக்காட்டி வசதியையும் பெற முடியாது என கூறப்படுகிறது. ஸ்கூட்டரின் தோற்றத்தை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், புதிய 450எஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1.30 லட்சம் என ஏற்கனவே ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துவிட்டது.அதேபோல் ஏத்தர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ப்ரீ-புக்கிங்குகளும் ஏற்கனவே நாடு முழுவதும் துவங்கப்பட்டு விட்டன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிரபலமான 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க பயன்படுத்திய அதே 450 பிளாட்ஃபாரத்தை உபயோகித்தே 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆனால், குறைந்த விலையில் விற்பனை செய்ய, அளவில் சிறியதான 3kWh பேட்டரி தொகுப்பு இந்த புதிய ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web