பெற்றோர்களே உஷார்... ப்ளீஸ்... வலிக்குது .... விட்டுடுங்க... யோகா பயிற்சியில் கதறும் சிறுமி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
யோகா யோகா

யோகா பயிற்சியின் போது மாணவி ஒருவர் வலியால் கதறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பயிற்சியின் போது, அந்தச் சிறுமி வலியைத் தாங்க முடியாமல் கதறுவதும், அதைக் கண்டுகொள்ளாமல் பயிற்சியாளர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் கற்கும் பயிற்சி மையங்களில் இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

வீடியோவில் அந்தச் சிறுமி, "ஐயா, ரொம்ப வலிக்குது, தயவுசெய்து விட்டுடுங்க" என்று கெஞ்சுவதும், அதையும் மீறிப் பயிற்சியாளர் பயிற்சியைத் தொடர்வதும் பதிவாகியுள்ளது. உடல் நெகிழ்வுத்தன்மை என்ற பெயரில் சிறுமிகளுக்குத் தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்படுவது குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையைப் பாதிக்கும் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய வரம்பு மீறிய செயல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

குழந்தைகள் பங்கேற்கும் வகுப்புகளில் முறையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அவசியம் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்குப் பெண் பயிற்சியாளர்களே பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் செல்லும் பயிற்சி மையங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.