எல்லை மீறி போறீங்கடா.. தண்டவாளத்தில் வெடி வெடித்த யூடியூபர்..!!

 
 Stupid DTS

ரயில்வே தண்டவாளத்தில் பாம்பு வெடி வெடித்து யூடியூபர் செய்த செயல் இணையதளவாசிகளிடம் விமர்சனம் பெற்றுள்ளது.

Trains of India நேற்று தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது. அதில், ரயில் தண்டவாளத்தில் பட்டாசு வெடிக்கும் யூடியூபர் எனக் குறிப்பிட்டு இது போன்ற செயல்கள் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தி இருந்தது.


இச்சம்பவம் நடந்த இடத்தையும் Trains of India குறிப்பிட்டு இருந்தது. இடம்: 227/32 ஃபுலேரா-அஜ்மீர் பிரிவில் தந்த்ரா நிலையம் அருகில் என தனது எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டி இருந்தது. மேலும் 33 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருந்தது. அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில், நபர் ஒருவர் பாம்பு வெடி எனப்படும் மாத்திரைகளை அதிகளவில் குவித்துவைத்துள்ளார். சிகரெட்டை பற்றவைக்கும் லைட்டர்களைக் கொண்டு அதைப் பற்றவைக்கிறார். உடனடியாக அதில் இருந்து கரி மேலே வருகிறது. அதிகளவில் புகை சுற்றிலும் பரவுகிறது. அருகே ஒரு ரயிலும் செல்கிறது.

வெடிக்கும் யூ டியூபர்

Trains of India அந்த யூ டியூப் சேனலின் பெயரையும் பகிர்ந்துள்ளது. Stupid DTS எனப்படும் அந்த சேனல் சப்க்ரைபர்களைக் கொண்டுள்ளது. அந்த சேனல் முழுவதும் பட்டாசுகளையும் வெடிகளை மட்டுமே வைத்து வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web