"மேடைக்கு மேடை மிசா கைது குறித்து ஒப்பாரி வைக்கிறீர்கள்" - தவெக விமர்சனம்!
காணொளி வெளியிட்டு விளக்கம் அளித்த பிறகும் மேடைதோறும் மிசா கைது குறித்துப் புலம்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ள தவெக ஐடி விங், அதற்கான தடுப்புக் காவல் நகலை மட்டும் வெளியிட மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி ஆளுங்கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளது.
காணொளி மூலம் விளக்கமளித்த பின்பும், மேடைக்கு மேடை மிசா கைது குறித்துப் பேசி வருவதை விமர்சித்துள்ள தவெக ஐடி விங், உண்மையான தடுப்புக் காவல் நகலை வெளியிடத் தயங்குவது ஏன் எனச் சவால்விட்டுள்ளது.

"ரீல்ஸ் ஆட்சி என்று ரீல்ஸ் போட்டுப் புலம்பும் ஊழல் பீரோ மன்னனே... பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசும் ஆபாசக் கும்பலின் தலைமையே" என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
நள்ளிரவில் சமூக வலைதளங்களில் உலா வரும் சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் குடும்பச் சொத்து விவகாரங்கள் குறித்தும் உரிய விளக்கமளிக்க வேண்டும் எனத் தவெக ஐடி விங் தங்களது பதிவில் வலியுறுத்தியுள்ளது.
