“திருமணம் செய்யாமலேயே குழந்தை பெத்துக்கலாம்...” - மகளின் முடிவுக்குப் பச்சைக்கொடி காட்டிய சத்யராஜ் - முற்போக்கான முடிவா?
நடிகர் சத்யராஜின் மகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.
பெண்கள் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும், தாய்மை அடைவதிலும் முழு சுதந்திரம் கொண்டிருக்க வேண்டும் எனத் திவ்யா தெரிவித்துள்ளார். "திருமணம் செய்துகொண்டால் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சமூகக் கட்டாயத்தை நான் ஏற்க மாட்டேன்" என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். தனித்துவமான மற்றும் முற்போக்கான இந்தச் சிந்தனை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தன் மகளின் இந்த முடிவிற்கு நடிகர் சத்யராஜ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தான் ஒரு தீவிரப் பெரியாரியவாதி என்பதால், பழைய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் தமக்கு உடன்பாடில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நவீன மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தி (உதாரணமாக IVF அல்லது வாடகைத் தாய் முறை), ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமலே தாய்மை அடைய முடியும் என்றும், அதில் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சத்யராஜ் - திவ்யா இருவரின் இந்தக் கருத்துக்கள் ஒருபுறம் "முற்போக்கானது" என வரவேற்கப்பட்டாலும், மற்றொருபுறம் "சமூகக் கட்டமைப்பு சிதையும்" என்ற விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. எப்போதுமே தனது பெரியாரியக் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் சத்யராஜ், குடும்ப விஷயத்திலும் அதே முற்போக்கைக் கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.
