“ஒதுங்கி போக முடியாது... நிச்சயம் ஜெயிப்பேன்” - சுந்தர் சி சவால்!

 
சுந்தர்.சி உடல்நிலை குறித்து மனம் திறக்கிறார் குஷ்பு ! சுந்தர்.சி உடல்நிலை குறித்து மனம் திறக்கிறார் குஷ்பு !

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், புதிய நீதிக் கட்சி சார்பில் சுந்தர் சி. வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்.

இயக்குநர் சுந்தர் சி. பேசுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மக்கள் அன்பாலும் கண்டிப்பாக வெற்றிக்கனி எனக்குக் கிடைக்கும். சினிமா களம் எனக்குப் பழக்கமானது, ஆனால் இந்த அரசியல் களம் புதியது. மக்களின் ஆசீர்வாதத்துடன் களம் காண்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன் மற்றும் கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்."

 சுந்தர்.சி 

மதுரை மத்திய தொகுதி திமுக-வின் கோட்டையாகவும், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிடும் தொகுதியாகவும் இருப்பது குறித்த கேள்விக்கு, "போட்டி எல்லா இடத்திலும் கடினமாகத்தான் இருக்கும். போட்டி என்று பார்த்தால் ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கத் தான் போராடுகிறோம், கண்டிப்பாக ஜெயிப்போம்" எனத் தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார். "மதுரை எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் கோட்டை. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் திறக்கப் பாடுபடுவேன். சாலை வசதிகள், மேம்பாலங்கள் என மதுரையின் வளர்ச்சிக்காக உழைக்கவே வந்துள்ளேன்" என்றார்.

வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 11 மணிக்கு சுந்தர் சி. தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இன்று முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்த பிறகு, ஏப்ரல் 4 முதல் முழுவீச்சில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

சுந்தர்.சி உடல்நிலை குறித்து மனம் திறக்கிறார் குஷ்பு !

புதிய நீதிக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுகிறது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறுகையில், "தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் வரப்போகிறது. அந்த மாற்றத்தில் சுந்தர் சி. மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நிச்சயமாக அவைக்குள் நுழைவார்" எனத் தெரிவித்தார்.