’நீ பார்க்க இந்தியன் மாதிரி தெரியல’.. கத்தி பட வில்லனை கைது செய்த நியூயார்க் போலீசார்!

 
 நீல் நிதின் முகேஷ்

‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை நியூயார்க் போலீசார் கைது செய்தனர். நீல் நிதின் தான் இந்தியர் என்று  சொல்லியும் நம்பாத போலீசார் 4 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்ததற்காக நீல் நிதின் முகேஷ் பிரபலமானவர். அவரது தாத்தா முகேஷ் ஒரு பிரபல பாடகர். அவரது தந்தை நிதினும் ஒரு சிறந்த பாடகர். இந்த சூழலில், நிதின் ஒரு நடிகராக பரவலாக அறியப்படுகிறார்.

2014 இல் வெளியான விஜய்யின் ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலமானார். இந்த சூழலில், சமீபத்தில் நியூயார்க்கில் அவருக்கு நடந்த சம்பவம் குறித்து அவர் பேசினார். அதில், “நான் ‘நியூயார்க்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது.அந்த நேரத்தில், நியூயார்க் விமான நிலையத்தில் போலீசார் என்னை கைது செய்தனர். நான் இந்தியனைப் போல இல்லை என்று கூறி என்னை கைது செய்தனர். அவர்கள் என்னை ஒரு இந்தியன் என்று நம்பவில்லை.

எனக்கு இந்திய பாஸ்போர்ட் இருப்பதாக நான் சொன்னாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பற்றி பேசவே விடவில்லை. அவர்கள் என்னைப் பேச விடாமல் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் கிட்டத்தட்ட 4 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டேன். 4 மணி நேரத்திற்குப் பிறகு, ‘நீ என்ன சொல்லப் போகிறாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘என்னை பற்றி கூகிளில் தேடுங்கள்’ என்றேன். அதன் பிறகுதான் நான் விடுவிக்கப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web