"வலை விரிச்ச 'வல்லி' வசமா சிக்கிட்டா!" - தொழிலதிபர்களிடம் பணம் பறிச்ச கில்லாடிப் பெண் - தப்பி ஓடிய காதலனுக்குப் வலைவீச்சு!

 
பாலியல் ஹனி ட்ராப் மிரட்டல் பாலியல் ஹனி ட்ராப் மிரட்டல்

இலங்கையில் செல்வந்தர்களைக் குறிவைத்து, 'ஹனி ட்ராப்' வலை வீசிப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரை அந்நாட்டுப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்ட அவரது காதலன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் தொழிலதிபர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களைத் தனிமைக்கு அழைத்துச் சென்று ஆபாசப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி வந்த ஒரு பெண் மற்றும் அவரது கும்பலை இலங்கை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இலங்கையின் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் செல்வந்தர்களை இந்தப் பெண் குறிவைத்து வந்துள்ளார்.

காவலர்கள் இருவர் உல்லாசம்

முதலில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் நட்பு பாராட்டி, பின்னர் அவர்களை விடுதிகளுக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர். பின்னர், அவரது காதலன் மற்றும் கூட்டாளிகள் அங்கு வந்து, "நாங்கள் போலீஸ்" அல்லது "பெண்ணின் உறவினர்கள்" எனக் கூறி, அந்தப் புகைப்படங்களைக் காட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

உல்லாசம்

சமீபத்தில் ஒரு பிரபல தொழிலதிபரிடம் இருந்து பல லட்சம் ரூபாயைப் பறித்ததோடு, மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பொறுமையிழந்த அந்தத் தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார். போலீஸார் மறைந்திருந்து நடத்திய அதிரடி வேட்டையில் அந்தப் பெண் சிக்கினார். இந்தத் திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணின் காதலன், போலீஸார் வருவதை அறிந்து தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், இந்தப் பெண் ஏற்கனவே இது போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதும், மானத்திற்கு அஞ்சி பல தொழிலதிபர்கள் புகார் அளிக்காமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.