”நீ புத்திசாலியா வளரணும்”.. ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதிவிட்டு தாய் தற்கொலை..!!

 
அமுதவள்ளி

ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் வேலூரில் உள்ள தனியார் பேக்கரி கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மித்ராவயல் பகுதியைச் சேர்ந்த அமுதவள்ளி (33) என்ற பெண்ணுக்கும் கடந்த 2021 ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 1 வயதில் மிருதுலா பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதவள்ளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அமுதவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரகாஷ் மற்றும் அவரது தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆன நிலையில் அமுதவள்ளி உயிரிழந்த சம்பவம் குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும்  உயிரிழந்த அமுதவள்ளி எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர், அதில் மிருதுலா.. அம்மா உன்னை விட்டுப் பிரிந்து போகிறேன்; நீ புத்தியுள்ள மகளாக வாழவேண்டும். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" எனக் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக உயிரிழந்த அமுதவள்ளியின் தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பின் இறப்புக்கான காரணம் தெரியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web