நீங்க தூங்கினால் போதும்.. 1 லட்சம் சம்பளம் கிடைக்கும்.. அதிரடி ஆஃபர் கொடுத்த நிறுவனம்..!!

அலுவலகத்தில் தூங்க வைத்து 1 லட்சம் சம்பளம் கொடுத்து பணியாளர்களை குஷி படுத்தியுள்ளது பெங்களூருவைச் சேர்ந்த Wakefit நிறுவனம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த Wakefit என்ற ஆன்லைன் நிறுவனம் மெத்தை தயாரிப்புகளை செய்து வருகிறது. தங்கள் மெத்தை தூங்குவதற்கு எந்த அளவுக்கு வசதியானது என்பதை வாடிக்கையாளர்களுக்கு நிரூபித்து காட்ட அந்த நிறுவனம் விரும்புகிறது. அந்த வகையில் 9:00 மணி நேரம் தூங்குவதற்கான பணியாளர்களை தேர்வு செய்கிறது. இவர்களுக்கான சம்பளம் ரூ.1 லட்சமாம். இதே போல ஃபின்லாந்து நாட்டில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றிலும் தூங்குவதற்கான பணியாளர்கள் இருக்கின்றனர்.
விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையிலும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகின்ற மெத்தைகளில் சௌகரியமான வகையில் தூக்கம் வருகிறதா என்பதை பரிசோதிப்பது தான் இவர்களுடைய வேலை.பாம்பு கடித்தால் ஆளைக் கொல்லுகின்ற விஷம் ஏறும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அந்த விஷமே சில மருந்து உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றும் கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில் சர்வதேச நிறுவனம் ஒன்று பாம்பு விஷத்தை எடுப்பதற்கான பணியாளர்களை சம்பள அடிப்படையில் நியமனம் செய்துள்ளது. மற்ற நபர்களுக்கு பாம்பை கடிக்க விட்டு உடனடியாக அவர்களது உடலில் இருந்து விஷத்தை உறிஞ்சி எடுப்பது தான் இவர்களது வேலை. உயிருக்கே அபாயம் கொண்ட வேலை என்பதால் இந்த வேலைக்கான ஊதியமும் மிக மிக அதிகம்.
மேலும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மெட்ரோ ரயில் நின்றதும் பயணிகளை வேக வேகமாக உள்ளே தள்ளி, கதவை அடைப்பது மற்றும் ரயில் புறப்படுவதற்காக விசில் அடிப்பது ஆகிய பணிகளுக்காக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.