அதிர்ச்சி... இளம்பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!

 
ஃபெலிஸ் நசீர்
 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் ஃபெலீஸ் நசீர் (31). கோழிக்கோடு ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் கேஇ ஃபெலிஸ் நசீர் (31) நேற்று மாலை, தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஃபெலிஸ் பொது அறுவை சிகிச்சை துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.  தூக்கில் தொங்கிய நிலையில், ஃபெலிஸைக் கண்டதும், அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். 

ஆம்புலன்ஸ்
இளம்பெண் மருத்துவர், தான் பணிபுரிந்த மருத்துவமனை குடியிருப்பு பகுதியிலேயே தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஃபெலிஸ் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிவு செய்து, ஃபெலிஸ் மரணத்திற்கான காரணம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web