இளம் இந்திய வீரர்... அபிஷேக் சர்மா 2,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை!
Oct 12, 2026, 18:10 IST
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்து இந்திய வீரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் குறைந்த பந்துகளில் (1,164 பந்துகள்) 2,000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களுக்கு மேல் குவித்த இந்திய வீரர்களின் புகழ்பெற்ற பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருடன் தற்போது அபிஷேக் சர்மாவும் இணைந்துள்ளார்.
