தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு... 2 பேர் கைது!

 
அரிவாள் வெட்டு கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிப் படுகாயப்படுத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

தூத்துக்குடி கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் ஞானதிரவியம் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பாரதிநகர் பகுதியில் ஞானதிரவியம் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. ஆத்திரமடைந்த அக்கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஞானதிரவியத்தை வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது. இத்தாக்குதல் சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொலை முயற்சியில் ஈடுபட்டது அதே பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த செல்லபாண்டி மகன் மகாராஜன் (33) மற்றும் முத்து மகன் முத்துராஜ் (25) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மகாராஜன், முத்துராஜ் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைப்பதற்கான மேல் நடவடிக்கைகளைக் காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.