ஓடும் ரயிலில் போதை மருந்தை எடுத்துக்கொண்ட இளைஞர்.. அதிர்ச்சியில் பெண் பயணிகள்..!
இந்தியாவிலேயே மிகப்பெரிய புறநகர் ரயில் சேவைகளில் ஒன்று, மும்பை நகரில் இயங்கி வரும் ரயில் சேவை. இதில் நாள் ஒன்றிற்கு 75 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது. அதில், கடந்த 18ம் தேதி மாலை 4.30 மணியளவில் ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறும் நபர் ஒருவர், படியின் ஓரத்தில் நின்று பயணம் செய்கிறார். சில நிமிடங்களுக்கு ஒருமுறை தன் கையில் வைத்திருந்த கர்சீப்பை எடுத்து வாயில் வைத்து எதையோ உரிஞ்சுகிறார்.
System Need to be changed, Kindly Notice from Railway Ministry, Maharashtra Government & Mumbai Police महिलांच्या डब्यात आता नशा करण्यापर्यंत मजल हाच आहे का प्रगतशील महाराष्ट्र..! pic.twitter.com/pNeUTUMoRI
— Samruddhi Thakare (@SamruddhiThaka7) October 18, 2023
அவரது இந்த நடவடிக்கையை கண்ட அந்த பெட்டியில் இருந்த பெண்கள் அவர் போதை மருந்து எடுத்துக்கொள்கிறார் என்பதை புரிந்துகொண்டனர். இந்த காட்சிகளை கண்ட பெண் பயணி ஒருவர் தனது செல்போனில் ரெக்கார்ட் செய்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அதில் அரசு நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என கூறியதோடு, ரயில்வே நிர்வாகமும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுவிணையாற்றியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பியான சுப்ரியா சுலே, பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலான இம்மாதிரியான சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியதோடு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவாவிடம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார். இந்த சம்பவம் ரயிலில் பயணிக்குக் பெண்களிடையே கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.